“நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம்” - பெற்றோருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

0 1842

நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை கண்டிப்புடன் நடத்துவது போன்ற செயலில் பெற்றோர் ஈடுபட வேண்டாம் எனக்கூறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாணவர்களுக்கு 110 ஆலோசகர்கள் கொண்டு மனநல ஆலோசனை வழங்கி வருவதாக தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேடையில் உள்ள சந்தையில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடப்பு ஆண்டில் நீட் தேர்வை அதிக மாணவர்கள் எழுதியுள்ளதாகவும், தேர்வு எழுதிய மாணவர்களில் 564 மாணவர்கள் அதிக மன உளைச்சலில் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கி வருவதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments