பிறந்தநாளை கொண்டாட நண்பர்களுடன் பைக்கில் 'டிரிபிள்ஸ்' சென்ற மாணவன் அரசுப்பேருந்து மீது மோதி உயிரிழப்பு..!

பிறந்தநாளை கொண்டாட நண்பர்களுடன் பைக்கில் 'டிரிபிள்ஸ்' சென்ற மாணவன் அரசுப்பேருந்து மீது மோதி உயிரிழப்பு..!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பிறந்தநாளை கொண்டாட நண்பர்களுடன் பைக்கில் டிரிபிள்ஸ் சென்ற மாணவன் அரசு பேருந்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்தான்.
12-ம் வகுப்பு படித்துவந்த பிரவீன், தனது பிறந்த நாளை கொண்டாட நண்பர்கள் இருவரை பைக்கில் அழைத்துச்சென்றுள்ளான்.
செக்போஸ்ட் மேம்பாலத்தில் ஏறியபோது எதிரே வந்த அரசுபேருந்து மீது பைக் நேருக்கு நேர் மோதியதில் பிரவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
மற்ற இரு மாணவர்களும் மேல்சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
முன்னதாக, பைக் மோதிய வேகத்தில் பேருந்து எஞ்சினில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
Comments