400 அப்பாவி பெண்களை கதற விட்டு வில்லங்கன் எடுத்த விபரீத வீடியோ..! பொள்ளாச்சியை மிஞ்சும் சம்பவம்

0 4607

சேலத்தில் சினிமா எடுப்பதாக கூறி பெண்களை மிரட்டி  ஆபாசம் படம் எடுத்த சம்பவத்தில் ஏமாற்றப்பட்ட பெண்கள் காவல்துறையில் புகார் அளிக்க பிரத்யேக புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த வேல் சத்ரியன் என்பவர் சினிமா எடுப்பதாக கூறி ஆபாசப் படம் எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரிடம் வேலை பார்த்த ஜெயதேவி என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டு சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

வேல் சத்ரியன் பயன்படுத்திய ஸ்டூடியோவை காவல்துறையினர் திறந்து பார்த்து, பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் லேப்டாப்புகள் ,
கேமரா, ஹார்ட் டிஸ்க், செல்போன்கள் போன்றவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இது தவிர சில ஆபாச வீடியோக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. பெண்கள் சிலர் கதறி அழுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோக்களில் இருந்தன.

பெண்கள் நிர்வாணமாக இருப்பதைப் போன்ற நூற்றுக்கணக்கான வீடியோக்கள் உள்ளன.

இந்த வழக்கை விசாரிக்கும் தனிப்படை போலீசாரின் விசாரணையில், சுமார் 400க்கும் மேற்பட்டோர் தங்களை சினிமாவில் சேர்த்துவிட விருப்பம் தெரிவித்து வேல் சத்ரியன் சினிமா கம்பெனியில் ஒப்பந்தம் செய்துள்ளனர் .
இவர்களில் பலர் முன்பணமும் செலுத்தியுள்ளனர் .

வேல் சத்திரியன் எவ்வளவு முன் பணம் வசூலித்து ஏமாற்றி உள்ளார் என்றும் விசாரணை நடந்து வருகிறது

இது தவிர வேல் சத்ரியன் நோபல் கிரியேஷன்ஸ் (Nobel Creations)என்ற சினிமா கம்பெனி நடத்தி இதில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு வந்து பெண்களை ஆபாச வீடியோ எடுத்து அந்த பெண்களை சினிமாவில் சேர்த்து விடாமல் மிரட்டி வந்து உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

இதில் ஏமாந்த பெண்கள் யார்? யார்? என்றும் தற்போது விசாரணை நடக்கிறது.
இந்த நிலையில், வேல் சத்ரியனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் மற்றும் வேறு ஏதாவது வகையில் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தவர்கள் உடனடியாக சேலம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் தொடர்பு கொள்ளலாம் என சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா தெரிவித்துள்ளார்.

அல்லது 98943 55193என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம். என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments