ஆன்லைன் ரம்மி - கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி

0 2175

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை பறிகொடுத்த பொறியியல் மாணவர், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சதாசிவபுரம் கிராமத்தை சேர்ந்த  சீனிவாசனின் மகனான சூரியபிரகாஷ்,  தனியார் பொறியியல் கல்லூரியில், 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். சீனிவாசனின் வங்கிக் கணக்கில் இருந்து, அவருக்கு தெரியாமல் 75 ஆயிரம் ரூபாயை தனது வங்கி கணக்குக்கு மாற்றி, ரம்மி விளையாடியுள்ளார்.

அந்த பணம் முழுவதையும் ரம்மியில் இழந்துவிட்டதால், மனமுடைந்து தோட்டத்தில் தெளிக்க வைத்திருந்த மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக பெற்றோர் அனுமதித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments