பெங்களூருவில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

0 3118

பெங்களூரில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

புறநகர் பகுதிகளான சர்ஜாப்புரா, மாரத்தஹள்ளி, பெல்லந்தூர், எமலூர் ஆகிய ஏரிகளில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.  தொடர்ந்து நீடிக்கும் மழையால் பெங்களூரு நகரம் மற்றும் புறநகர் பகுதி மக்களின் இயல்புவாழ்க்கை முடங்கி போய் உள்ளது.

இதனிடையே இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .பெங்களூரில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments