'பொன்னியின் செல்வன்' இசை வெளியீட்டு விழா..!

0 3216

சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீடு நிகழ்ச்சியில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். வரும் 30ஆம் தேதியன்று வெளியாக உள்ள அப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிடும் நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், கார்த்தி, சித்தார்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

அதேபோல், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, அதிதி ராவ் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மேலும், இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், மிஷ்கின், இசையமைப்பாளர் ஏர் ரகுமான் என ஏராளமான திரை பிரபலங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெயிலரை திரைப்பிரபலங்கள் வெளியிட்டனர். முன்னதாக நிகழ்ச்சியில், பவுன்சர்கள் தாக்கியதாக கூறி செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments