சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

0 2018
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய காட்சிகள் ஒரு காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. அதில், கட்டிடங்களின் சில பகுதிகள் இடிந்து விழும் காட்சிகளும், மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளில் இருந்து வெளியேறி ஓட்டம் பிடித்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

சிச்சுவான் மாகாணத்தில் நேற்று ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கிய 200க்கும் மேற்பட்டோரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments