பெங்களூருவை புரட்டிப் போட்ட கனமழை: டிராக்டர்களில் அலுவலகங்களுக்கு சென்ற ஐ.டி ஊழியர்கள்..!

0 2976

பெங்களூருவில் பெய்த தொடர் கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், ஐ.டி ஊழியர்கள் டிராக்டர்களில் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

எச்.ஏ.எல் விமான நிலையத்திற்கு அருகிலிருக்கும் ஏமலூர் பகுதி வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனம் ஓட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், ஏமலூரில் வசிக்கும் ஐ.டி நிறுவன ஊழியர்கள் டிராக்டர்களில் அலுவலகங்களுக்கு சென்றனர்.

மழை வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பினும், அலுவலகங்களில் விடுப்பு எடுக்க முடியாததால் 50 ரூபாய் கொடுத்து டிராக்டர்களில் செல்வதாக ஐ.டி ஊழியர்கள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments