அதிமுக பிரமுகரிடம் ரூ.50 லட்சம் திருடப்பட்ட வழக்கு.. காங்கிரஸ் நகரத் தலைவர் உட்பட 3 பேர் கைது!

0 2383

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுக பிரமுகரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் திருடப்பட்ட வழக்கில் பெரியகுளம் பகுதி காங்கிரஸ் நகரத் தலைவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரியகுளத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான நாராயணன் காரில் தான் கொண்டு சென்ற 50லட்சம் ரூபாயை வீட்டில் ஒப்படைக்குமாறு கார் ஓட்டுனர் ஸ்ரீதரிடம் சொல்லி விட்டு வேறு காரில் சென்றுள்ளார். 

ஆனால் கார் ஓட்டுனர் ஸ்ரீதர்  பணத்தை ஒப்படைக்காமல் 50 லட்சத்துடன் மாயமானதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக  நாராயணன் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் தலைமறைவாக இருந்த ஓட்டுனர் ஸ்ரீதரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் கொடுத்த தகவலின் பேரில் பெரியகுளம் நகர காங்கிரஸ் தலைவர் ஸ்ரீதர்,உறவினரான  பாலகிருஷ்ணன் ஆகியோரும்  கைது செய்யப்பட்டனர்.

மேலும் கார் ஓட்டுனர் ஸ்ரீதர் தனது உறவினர்கள் மூலம் இந்த பணத்தை கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியது தெரிய வந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments