பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் நகை, ரூ.6 லட்சம் ரொக்கம் கொள்ளை.. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

0 2870

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 60 சவரன் நகை மற்றும் 6 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ராஜவீதி பகுதியை சேர்ந்த வஹாப், திருப்பூரில் பேன்சி மற்றும் டாய்ஸ் ஸ்டோர் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை உறவினரின் இல்ல துக்க நிகழ்ச்சிக்காக வஹாப் குடும்பத்துடன் மைசூர் சென்று, அனைவரும் நேற்று மாலை வீட்டிற்கு திரும்பினர்.

அப்போது பூட்டிய வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 3 பீரோக்களில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

தகவலின் பேரில் விரைந்து வந்த அவிநாசி போலீசார், ஆறு தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments