திருடிய இரும்பை விற்று பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த நண்பன்.!

0 2993

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே திருடிய இரும்பை விற்று பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த நண்பனை போலீசார் கைது செய்தனர்.

தெற்கு வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த ராஜ் என்பவரின் மகன் ஆகாஷ், அதே கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மகன் ஆகாஷ். நண்பர்களான இருவரும், என்.எல்.சி. சுரங்கத்திலிருந்து இரும்பு பொருட்களை திருடி, விற்பனை செய்துவிட்டு பணத்தை இருவரும் பிரித்துக் கொள்வதாக கூறப்படுகிறது.

இதில் ஏற்பட்ட தகராறில் பிரகாஷின் மகன் ஆகாஷ் கத்தியால் குத்தியதில் ராஜ் மகன் ஆகாஷ் உயிரிழந்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments