கேரளாவில் கனமழையால் 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

0 3027

கேரளாவில் இன்று முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்று முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், கோட்டயம், ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடப்பட்டுள்ளது.

கேரள மாநில அரசின் கோரிக்கையை அடுத்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையிலிருந்து 125 வீரர்கள் அடங்கிய 5 குழுவினர் திருவனந்தபுரம், ஆலப்புழா, கொல்லம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments