சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு.!
தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து, மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
அருகே உள்ள பல பகுதிகளில் தொடர் அதிர்வுகளும் உணரப்பட்ட நிலையில், பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை 46 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments