பெங்களூருவில் பெய்துவரும் கனமழையால்.. டிராக்டரில் ஏறி பணிக்கு செல்லும் ஐ.டி ஊழியர்கள்.!

0 2497

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெய்துவரும் கனமழையால் சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே ஏமலூர் பகுதியில் வெள்ள நீருக்கு மத்தியில் ஐ.டி நிறுவன ஊழியர்கள் டிராக்டர்களில் அலுவலகங்களுக்குச் சென்றனர்.

அதிக விடுமுறை எடுக்க முடியாது என்றும், பணி பாதிக்கப்படும் என்றும் கூறி டிராக்டரில் ஏறி அவர்கள் பணிக்கு சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments