நாய் வாங்குவது போல் நடித்து ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு.. போலீசார் விசாரணை!

0 2728

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அதிகாலையில் கோலம் போட வந்த ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 4 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற கொள்ளையன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருணாசலபுரத்தில் வசித்து வரும் 70 வயதுடைய ஓய்வு பெற்ற ஆசிரியையான கிருஷ்ணவேணி, நாய்குட்டிகளை விற்று வருவதை தெரிந்து கொண்டு நாய் குட்டி வாங்குவது போல பேச்சுக்கொடுத்து கொள்ளையன் நகையை பறித்துச்சென்றுள்ளான்.

சிசிடிவி காட்சிகளில் அவன் தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தாலும் அதில் தெளிவில்லை என்பதால் போலீசார் அவனது அடையாளங்களை கொண்டு தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments