அரசு நகரப் பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவன் தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு!

0 2914

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறஞ்சி கிராமத்தில் இருந்து அரசு நகரப் பேருந்து 150 பயணிகளுடன் உளுந்தூர்பேட்டைக்கு சென்றது.

அரசு பள்ளி மாணவ மாணவிகள் அதிக அளவில்  நெருக்கியடித்துக் கொண்டு பயணித்த நிலையில்,  முன்பக்க படியில் தொங்கியபடி பயணம் செய்த ஏ.சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் ராஜேஷ் திடீரென தவறி கீழே விழுந்தார்.

இதில் பேருந்தின் பின்பக்க டயர் மாணவனின் வலது காலில் ஏறி இறங்கியதால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மாணவர்கள் சத்தம் போட்ட நிலையில் சுமார் 200 மீட்டர் தூரம் சென்றபின் பேருந்து நின்றது.

இந்நிலையில், காயமடைந்த மாணவனுக்கு  உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments