சுவாமி தரிசனம் செய்ய டிக்கெட் தரவில்லை எனக்கூறி தேவஸ்தான ஊழியர்களை தாக்கிய நடிகை.. இணையத்தில் பரவும் வீடியோ!

0 3595

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய டிக்கெட் வழங்காததாகக் கூறி தேவஸ்தான ஊழியர்களை நடிகை ஒருவர் தாக்குவது போன்ற காட்சிகள் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

உத்திரபிரதேசத்தை சேர்ந்த நடிகையான அர்ச்சனா கவுதம் என்பவர் கடந்த வியாழனன்று சுவாமி தரிசனம் செய்ய திருப்பதி சென்றார்.

தனக்கு தேவையான டிக்கெட்களை வாங்க திருப்பதியில் கூடுதல் நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கு அவர் சென்ற நிலையில், அங்கு டிக்கெட் கொடுப்பது தொடர்பாக ஊழியர்களுக்கும், நடிகைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது தேவஸ்தான ஊழியர் ஒருவரை நடிகை தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், பக்தர்களுக்கு தேவையான டிக்கெட்டுகளை வழங்க ஊழியர்கள் மறுப்பதாகவும், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி அர்ச்சனா வீடியோ வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments