தனியார் பள்ளி வாகனத்தின் அவசர பகுதி கதவு திறந்ததால் மாணவி கீழே விழுந்து காயம்

0 3171

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் பள்ளி வாகனத்தின் அவசர பகுதி கதவு திடீரென திறந்ததால் அங்கு அமர்ந்திருந்த பள்ளி மாணவி சாலையில் விழுந்து காயமடைந்தார்.

தொட்டம்பட்டியை சேர்ந்த 10 வயதான ரதிமா கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கம்போல் பள்ளியின் வாகனத்தில் சென்ற நிலையில், முடுக்கலான்குளம் பகுதியில் வளைவில் திரும்பும்போது, வாகனத்தின் அவசர வழி கதவு திடீரென திறந்ததால் மாணவி கீழே விழுந்து காயமடைந்தார்.

மாணவர்களின் கூச்சலை கேட்டு வாகனத்தை நிறுத்திய ஒட்டுநர் சுந்தரம், மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments