ஆப்கானிஸ்தானில் ரஷ்ய தூதரகத்திற்கு அருகே குண்டுவெடிப்பு.. அதிகாரிகள் உட்பட 20 பேர் உயிரிழப்பு!

0 2078

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு அருகே நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் தூதரக அதிகாரிகள் இருவர் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.

Darulaman சாலையில் உள்ள தூதரகத்திற்கு வெளியே விசா பெற பலர் காத்திருந்த நிலையில், தூதரக அதிகாரி ஒருவர் விண்ணப்பதாரர்களின் பெயர்களை கூற வெளியே வந்த போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தூதரகத்தின் நுழைவாயில் அருகே தற்கொலைப்படை தாக்குதல் நடத்த வந்த பயங்கரவாதி குண்டுகளை வெடிக்கச் செய்ததாவும், அந்த நபர் நுழைவாயிலை நெருங்கிய போது ஆயுதமேந்திய காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments