ஜெர்மனியை நோக்கிச் சென்ற சிறியரக விமானம் கடலில் விழுந்து விபத்து.. 4 பேர் உயிரிழப்பு.!

0 2402

ஜெர்மனியை நோக்கிச் சென்ற தனியார் ஜெட் சிறியரக விமானம் லாட்வியாவில் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.

ஆஸ்திரியாவை சேர்ந்த செஸ்னா 551 ரக ஜெட் விமானம் ஸ்பெயின் மற்றும் கொலோன் இடையே பறந்து கொண்டிருந்தபோது, விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்பை துண்டித்த விமானம், பால்டிக் கடலில் சுவீடன் வான்வெளியில் பறந்து பின்னர் வென்ட்ஸ்பில்ஸ் கடற்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தீர்ந்ததால் அந்த விமானம் விபத்துக்குள்ளானதாகவும், லாத்வியா, லிதுவேனியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் இருந்து விரைந்து சென்ற படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் உயிரிழந்த 4 பேரின் உடல்களை படகுகள் மூலம் தேடி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments