ஐ போன் 5, ஐ போன் 5 சி செல்போன்களில் அக்டோபர் முதல் வாட்ஸ் அப் செயல்படாதென தகவல்

0 3112

ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5 சி  செல்போன்களில் அக்டோபர் மாதம் முதல் வாட்ஸ் அப் செயல்படாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த 2 செல்போன்களும், iOS 10 அல்லது iOS 11  இயங்குதளங்களில் செயல்படக் கூடியது. அந்த 2 இயங்குதளங்களிலும் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தும் வசதியை ஆப்பிள்  நிறுத்தவுள்ளது. இதனால்  iOS 12 இயங்குதளத்துக்கு அப்டேட் செய்தாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் அந்த செல்போன்களில் அப்டேட்டுக்கு சாத்தியமில்லை என்பதால், அக்டோபர் 24 முதல் வாட்ஸ் அப்-பை பயன்படுத்த முடியாது என்றும், அதேநேரத்தில்  ஐபோன் 5 எஸ் செல்போன் வைத்திருப்போர், iOS 12-க்கு அப்டேட் செய்து வாட்ஸ் அப் பயன்படுத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments