சென்னையில் திடீர் டீசல் தட்டுப்பாடு.! - 'டீசல் இல்லை' என அறிவிப்பு பலகை.!

0 2731

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

எழும்பூர், புரசைவாக்கம், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பெட்ரோல் பங்குகளில் "டீசல் இல்லை" என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களில் இருந்து 2 நாட்களுக்கு முன் வரவேண்டிய டீசல் இன்று காலை தான் வந்ததகாவும் வழக்கத்தை விட குறைவாக டீசல் வழங்கப்பட்டதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் பங்க் ஊழியர்கள் கூறுகின்றனர்.

பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களில் உற்பத்தி திறன் குறைப்பு, கச்சா எண்ணெய் வரத்து குறைவு காரணமாக டீசல் உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு நிலவுவதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments