சேலம் அரசு மருத்துவமனையில் சிறைக் கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

0 2591

சேலம் மாவட்ட அரசு மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த சிறைக் கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட பழைய தருமபுரியை சேர்ந்த தங்கராஜ் என்பவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், 2013ம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது போல் இருந்ததை அடுத்து சென்னை கீழ்பாக்கம்  மருத்துவமனையில் அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் சேலம் மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்ட கைதி தங்கராஜ், கடந்த 3ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments