அதிமுக பிரமுகரின் ரூ.50 லட்சம் பணத்துடன் தலைமறைவான ஓட்டுநர் கைது..!

0 2896
அதிமுக பிரமுகரின் ரூ.50 லட்சம் பணத்துடன் தலைமறைவான ஓட்டுநர் கைது..!

தேனியில் அதிமுக பிரமுகரின் 50 லட்ச ரூபாய் பணத்துடன் தலைமறைவான அவரது ஓட்டுநர் தென்காசியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவாளரான பெரியகுளத்தைச் சேர்ந்த நாராயணனிடம், வடகரை பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

உசிலம்பட்டியிலிருந்து காரில் 50 லட்ச ரூபாய் பணத்துடன் பெரியகுளம் நோக்கி இருவரும் வந்த போது, நாராயணன் ஆண்டிப்பட்டியில் இறங்கி, பணத்தை வீட்டில் ஒப்படைக்குமாறு கூறிவிட்டு தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகானின் காரில் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பணத்துடன் ஓட்டுநர் தலைமறைவாகி விட்டதாக நாராயணன் அளித்த புகாரின்பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், தென்காசியில் வைத்து மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.

அவரின் உறவினர்களின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments