தூக்கிலிடப்பட்ட நிரபராதி : 70 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த உண்மை..!

0 11293
தூக்கிலிடப்பட்ட நிரபராதி : 70 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த உண்மை..!

கொலைக் குற்றத்திற்காக தவறாக குற்றம் சாட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் சிறையில் தூக்கிலிடப்பட்ட நபரின் குடும்பத்தினரிடம், நீதி தவறியதற்காக இங்கிலாந்து காவல்துறை மன்னிப்புக் கோரியுள்ளது.

1952-ஆம் ஆண்டில் கார்டிஃப் நகரத்தில் ஆடை வியாபாரியான Lily Volpert என்ற பெண்ணை கொலை செய்ததற்காக, மஹ்மூத் மட்டான் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

மட்டான் குற்றம் புரியவில்லை என்று நிரூபிக்க அவருடைய மனைவியும், மகன்களும் கடந்த 46 ஆண்டுகளாக போராடி வந்துள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை.

நீதி தாமதமாகவே கிடைத்துள்ளது என்று மட்டானின் பேத்தி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments