கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 55 பேர் சென்ற படகில் பலர் உயிருடன் மீட்பு..!

0 3049
கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 55 பேர் சென்ற படகில் பலர் உயிருடன் மீட்பு..!

பீகார் தலைநகர் பாட்னாவை ஒட்டியுள்ள டானாபூர் பகுதியில் உள்ள கங்கை ஆற்றில் பயணிகள் படகு மூழ்கியது, இந்தப் படகில் சுமார் 55 பேர் இருந்தனர்.

நீரில் மூழ்கியவர்கள் மீட்கப்பட்ட போதும் அதில் இருந்த 10 பேர் காணாமல் போயுள்ளனர், காணாமல் போன அனைவரையும் மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

தொழிலாளர்கள் பணி முடித்து கங்காரா ஆற்றில் படகு மூலமாகத் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. படகு மூழ்கிய தகவல் அறிந்ததும் கரையில் ஏராளமான மக்கள் திரண்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments