8ஆம் வகுப்பு மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு..!

0 9041
8ஆம் வகுப்பு மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு..!

காரைக்காலில் விஷம் கலந்த குளிர்பானத்தை 8ம் வகுப்பு மாணவனுக்கு கொடுத்து கொலை செய்த பெண்ணை கைது செய்த போலீசார் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நேரு நகர் ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன்-மாலதி தம்பதியரின் மகன் பாலமணிகண்டன் உடன் பயிலும் மாணவி அருள்மேரியின் தாய் சகாயராணி விக்டோரியா என்பவர், தனது மகளை விட பாலமணிகண்டன் நன்றாக படிப்பதால் பூச்சி மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார்.

அதனை அருந்திய பால மணிகண்டன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதற்கிடையில்  விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சிறுவனின் வீட்டிற்கு நேரில் சென்ற புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியதுடன் அவர்களது கோரிக்கைகளை கேட்டு அதனை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments