பெங்களூரில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் தத்தளித்த முக்கிய சாலைகள்

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பெங்களூர் நகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. நேற்று பெங்களூரில் இடைவிடாத மிக பலத்த மழை பெய்துள்ளது.
இதனால் ஆங்காங்கே மரங்கள் சரிந்து விழுந்தன. கோரமங்களா பகுதியில் ஒரு மரம் வேரோடு சாய்ந்ததாக புகார் அறைக்கு தகவல் வந்தது. முக்கிய வர்த்தக பகுதிகளான மைசூர் சாலை, பன்னர்கட்டா சாலை, தும்கூரு சாலை, கே.ஆர்.புரம், உள்ளிட்ட நகரின் பல முக்கிய சாலைகளில் வெள்ளம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மழை காரணமாக நேற்று விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.வரும் 9 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Comments