திரையரங்கில் மதுபோதையில் ரகளை செய்த கும்பல்... தர்மஅடி கொடுத்து துரத்தியடித்த மக்கள்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் திரையரங்கில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமிகளை, ஆத்திரமடைந்த பொதுக்கள் தர்மஅடி கொடுத்து துரத்தியடித்தனர்.
ஜங்ஷன் சாலையில் உள்ள திரையரங்கத்தில் விடுமுறை நாளான நேற்று குடும்பத்துடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் சினிமா பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, 7 பேர் கொண்ட கும்பல் மதுபோதை தலைக்கேறிய நிலையில், திரைக்கு முன்பு சென்று சட்டையை கழற்றி ஆட்டம் போட்டு கொண்டிருந்தனர்.
பொதுமக்கள் பல முறை எச்சரித்தும், அதனை கண்டுகொள்ளாமல் அனைவரையும் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை தர்மடி கொடுத்து வெளியே தள்ளினர்.
Comments