ஆனந்த யாழை மீட்டி அன்பெனும் தீயை மூட்டிய நா.முத்துகுமாருக்கு மூன்று விருதுகள்..!

0 2769
ஆனந்த யாழை மீட்டி அன்பெனும் தீயை மூட்டிய நா.முத்துகுமாருக்கு மூன்று விருதுகள்..!

சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின்  மூன்று விருதுகள் மறைந்த கவிஞர் . நா முத்துக்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வண்ணத்துப் பூச்சிளை வரிகளாக்கி, தூரிகைகளை வார்த்தைகளாக்கி குற்றால சாரலை பாடலாக்கி இசை ரசிகர்களுக்கு வழங்கியவர் மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார்

இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் என்று மறைந்தும் நம்மிடையே பாடல்வரிகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் நா. முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் 3 விருதுகள் வழங்கப்பட்டது.

2012, 2013, 2014 ஆகிய வருடங்களுக்காக தங்க மீன்கள், சைவம் உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடல் ஆசிரியர் என்று 3 விருதுகள் அவருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது மகன் மற்றும் மகள் இருவரும் இணைந்து 3 விருதுகளையும் பெற்றுக் கொண்டனர்.

மஞ்சள் காமாலை என்ற நோய் மட்டும் நெருங்கவில்லை யெனில், நாவிற்கு இனிய சொற்களால் மனதை மயக்கும் பல பாடல் வரிகளை படைத்தமைக்காக நா. முத்துகுமாருக்கு இன்னும் நிறைய விருதுகள் பெருமை சேர்த்திருக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments