இரு நடிகைகளுக்காக காத்திருந்ததால் மோதல்.. சினிமா தயாரிப்பாளர் கொலை.. டூயல் சிம் ஆசை நிராசையானது..!

0 3425

இரண்டு நடிகைகளுக்காக நடந்த மோதலில் சினிமா தயாரிப்பாளரை அடித்துக் கொலை செய்து சாலையில் வீசியதாக துணை நடிகர் ஏஜெண்டு கைது செய்யப்பட்டுள்ளார்...

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் 67 வயதான சினிமா தயாரிப்பாளர் பாஸ்கரன். 1995ல் ராம்கியின் நடிப்பில் சாம்ராட் என்ற படத்தை தயாரித்துள்ளார்.

 

அதன்பின்னர் ஏராளமான படங்களுக்கு பைனான்ஸ் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலையில் கடைசியாக மனைவியிடம் பேசிய பாஸ்கரன் அதன்பின்னர் மாயமானார்.

மறு நாள் சனிக்கிழமை காலை கோயம்பேடு சின்மயா நகர் நெற்குன்றம் சாலையில் குப்பைகள் அடைக்கப்படும் கறுப்பு வண்ண பிளாஸ்டிக் பையில் பாஸ்கரன் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரை யாரோ அடித்து கொலை செய்து பிளாஸ்டிக் பையில் மூட்டையாக கட்டி வீசியது தெரியவந்தது. போலீசார் செல்போன் தொடர்புகள் மூலம் அவர் கடைசியாக விருகம் பாக்கத்தை சேர்ந்த சினிமா துணை நடிகர் நடிகைகள் ஏஜெண்டு கணேசன் என்பவரிடம் பேசியது தெரியவந்தது.

அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அவரது வீடு பூட்டப்பட்ட நிலையில் அவரது செல்போனை வைத்து சோழவரத்தில் கணேசன் பதுங்கி இருந்ததை கண்டுபிடித்தனர்.

ஒரு துணை நடிகையின் வீட்டில் இருந்த கணேசனை பிடித்து விசாரித்த போது பாஸ்கரன் கொலைக்கான காரணம் அம்பலமானது..

பல்வேறு சிறிய படங்களுக்கு பைனான்ஸ் செய்து வந்த பாஸ்கரன் பெண்கள் விஷயத்தில் சபலம் கொண்டவராக இருந்துள்ளார்.

தோளுக்கு மேல் வளர்ந்த பையன் இருக்கும் நிலையில் கடந்த 7 வருடங்களாக கணேசன் மூலமாக அறிமுகமான பெண்களுடன் மது அருந்தி பொழுது கழிப்பதை வழக்கமாக்கி உள்ளார்.

சம்பவத்தன்று இரு மலர்கொடிகளை பார்ட்டிக்கு அழைத்து வருவதாக கணேசன் கூறியதை நம்பி 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து பாஸ்கரன் மது அருந்திக் கொண்டு காத்திருந்துள்ளார்.

இருவரும் துணை நடிகைகள் என்று கூறியதால் கூடுதல் எதிர்பார்ப்பில் காத்திருந்த பாஸ்கரன் நேரம் செல்ல செல்ல கணேசனையும், அவரது குடும்பத்தாரையும் மோசமாக திட்ட ஆரம்பித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கணேசன், பாஸ்கரனை தாக்கியதால் கைகலப்பு உருவாகி உள்ளது. இதில் பாஸ்கரனை அடித்து கொலை செய்த கணேசன், கடைக்கு சென்று குப்பைகள் அடைக்க பயன்படுத்தும் கருப்பு பை வாங்கி வந்து சடலத்தை அதில் மூட்டையாக கட்டி, இரவோடு, இரவாக தோளில் தூக்கிச் சென்று சாலையில் வீசிச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து கொலையாளி கணேசனை கைது விருகம் பாக்கம் செய்த போலீசார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிங்கிள் சிம்கார்டை சமாளிப்பதே பலருக்கு சிரமமான நிலையில், 67 வயதில் கூடுதலாக டூயல் சிம்முக்கு ஆசைப்பட்டு உயிரை பறிகொடுத்துள்ளார் பாஸ்கரன் என்று போலீசார் சுட்டிக்காட்டும் நிலையில் நல்ல குடும்பம், நிறைந்த வசதி இருந்தாலும் சபலத்தால் தடம் மாறினால் என்ன மாதிரியான சம்பவம் நடக்கும் என்பதற்கு சாட்சியாகி இருக்கின்றது இந்த கொலை சம்பவம்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments