விஷம் கொடுத்து கொல்லப்பட்ட 8ஆம் வகுப்பு மாணவனின் உடல் தகனம்

0 3140

காரைக்காலில் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட 8ஆம் வகுப்பு மாணவனின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது.

வகுப்பில் தனது மகளை விட நன்றாக படிக்கும் மாணவன் பாலமணிகண்டனை விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்துக் கொலை செய்த புகாரில், மாணவியின் தாயை போலீசார் கைது செய்தனர். சிகிச்சையில் இருந்த மாணவன் உயிரிழந்ததை அறிந்த அவரது உறவினர்கள், காரைக்கால் அரசு மருத்துவமனையில் கண்ணாடி, குடிநீர் இயந்திரம் ஆகியவற்றை அடித்து நொறுக்கியதோடு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால் துணை ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்ற நிலையில், ஜிப்மர் மருத்துவர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மாணவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

காரைக்காலில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல், ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு முல்லை நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments