ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர், அவரது உறவினர் கைது

0 2591

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் தனியாக நடந்து சென்ற மருத்துவ மாணவிக்கு மது போதையில் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் காவலர், மற்றும் அவரது உறவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையிலான கலாச்சார நிகழ்ச்சிகள் அக்கல்லூரியில் நடைபெற்ற நிலையில், வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், தனக்கு கல்லூரி வளாகத்தில் இருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக, அந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஐதராபாத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி புகாரளித்தார். இதனை அடுத்து, சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், காவலர் கண்ணன், அவரது உறவினர் சிவா ஆகியோர் அந்த செயலில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்த நிலையில், கண்ணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments