முகம் தெரியா ஆண் நோயாளி உயிரை காப்பாற்றிய மூளைச்சாவு அடைந்த பெண்.!

ஆரணியில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண், உடல் உறுப்பு தானம் மூலம் 5 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
கடந்த 1ம் தேதி ஆரணியைச் சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண் சாலையோரம் நடந்து சென்ற போது பின்பக்கமாக வந்த பைக் மோதியதில் படுகாயம் அடைந்து அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று காலை அந்த பெண் மூளைச்சாவு அடைந்த நிலையில், உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் ஒப்புக் கொண்டதை அடுத்து இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் கண்கள் தானமாக பெறப்பட்டன.
பெண்ணின் இதயம் ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆண் நோயாளிக்கு பொருத்தப்பட்டது. மற்ற உறுப்புகள் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.
Comments