டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் பலி.!

0 2840

டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரான சைரஸ் மிஸ்திரி மும்பை அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பைக்கு 4 பேருடன் சைரஸ் மிஸ்திரி காரில் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது, பால்கர் என்ற பகுதியில் மிஸ்திரியின் கார் சாலையின் டிவைடர் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்துள்ளார். விபத்தில் சைரஸ் மிஸ்திரி உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ரத்தன் டாடாவிற்கு பிறகு 2012ஆம் ஆண்டு முதல் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக செயல்பட்ட அவர், 4 ஆண்டுகளுக்கு பிறகு அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே, சைரஸ் மிஸ்திரியின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments