சென்னையில் 8 ஆண்டுகளாக நிறுத்தப்படும் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல்.!

0 4059

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்கப்பல் சென்னை அருகே காட்டுப்பள்ளி துறைமுகத்தில் எட்டு ஆண்டுகள் வரை நிலைநிறுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காட்டுப்பள்ளியில் உள்ள L&T கப்பல் கட்டும் நிறுவனத்துடன் கடந்த சில ஆண்டுகளாக இந்திய கடற்படை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2ம் தேதி கேரளாவின் கொச்சி கடற்படை தளத்தில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 262 மீட்டர் நீளம் மற்றும் 62 மீட்டர் அகலம் கொண்ட ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments