விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் நடனமாடி கொண்டிருந்த பொது சரிந்து விழுந்து உயிரிழந்தார் நடன கலைஞர்.!

உத்தர பிரதேசத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் நடனமாடி கொண்டிருந்த கலைஞர் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
மெயின்புரி மாவட்டத்தின் கோட்வாலி பகுதியில் உள்ள சிவன் கோயிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்றிரவு புராண நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, பக்தர்கள் முன்பு அனுமன் வேடமிட்டு நடனமாடி கொண்டிருந்த ரவி சர்மா என்ற கலைஞர் திடீரென சுருண்டு விழுந்த நிலையில், மயங்குவதுபோல், தனது கலைத்திறனை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாக நினைத்து பக்தர்கள் சில நிமிடங்கள் அவரது அருகில் செல்லாமல் இருந்தனர்.
பின்னர், உயிருக்கு போராடியவரை அங்கிருந்தவர்கள் தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Comments