கோயம்புத்தூர் யூடியூப்பர்ஸின் பிராங்க் குசும்புக்கு ஆப்படித்த போலீஸ்... இனி சீண்டினால் சிறைதான்..!

0 3419

கோயம்புத்தூரில் பொது இடங்களில் பிராங்க் என்ற பெயரில் பெண்களையும், பொதுமக்களையும் அச்சுறுத்தி வரும் யூடியூப்பர்களுக்கு மாநகர காவல் ஆணையர் தடை விதித்துள்ளார்.

கோயம்புத்தூரில் உள்ள பூங்காவில் அமர்ந்திருக்கும் பெண்களுக்கு அருகில் அமர்ந்து முடியை வெட்டுவது போல ஷோ..காட்டி அவர்களை அச்சுறுத்துவது...

பதறிபோய் வாக்குவாதம் செய்யும் பெண்களிடம் பிராங்க் செய்ததாக கூறி கெத்துக் காட்டுவது.....

அதேபோல சிவனேனுன்னு போய் கொண்டிருக்கிற இளைஞரை மறித்து கன்னத்தில் அடிப்பது போல அச்சுறுத்தும் பெண் ஒருவர், பிராங்க் செய்வது....

இப்படி போகிற வருகிற பெண்களிடமும், இளைஞர்களிடமும் கோவை குசும்பு என்ற பெயரில் குரங்கு சேட்டை செய்வோரால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக போலீசுக்கு புகார்கள் குவிந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

இனி பிராங்க் என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தினாலோ, அதனை வீடியோவாக எடுத்து யூடியூப்பில் வீடியோ பதிவிட்டலால் , சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவர்களின் யூடியூப் சேனல்கள் முடக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

பிராங்க் சேட்டை செய்த ராசாக்களுக்கும், ராசாத்திக்களுக்கும் போலீஸ் பெரிய ஆப்பாக வைத்திருப்பது பொது மக்களை நிம்மதி அடைய செய்திருக்கின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments