ஜம்மு-காஷ்மீர் மக்களுக்காக புதிய கட்சியை துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளார் குலாம்நபி ஆசாத்.!

0 2770

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குலாம்நபி ஆசாத், ஜம்மு-காஷ்மீர் மக்களுக்காக புதிய கட்சியை துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஜம்முவின் சைனிக் காலனியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், ஜம்மு காஷ்மீரின் நலனை முன்னிறுத்தி கட்சி துவங்கவுள்ளதாகவும், கட்சியின் பெயர் மற்றும் கொடியை ஜம்மு காஷ்மீர் மக்களே தீர்மானிப்பார்கள் என தெரிவித்தார். 

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்த்து வழங்க கோரிக்கை விடுப்போம் என தெரிவித்த அவர், வெளிமாநிலத்தவர் இடம் வாங்கவோ, அரசு வேலை பெறவோ அனுமதிக்கமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments