நீச்சல் தெரியாத மாணவனை வற்புறுத்தி நீரில் இறக்கிய நண்பர்களால் பலியான மாணவன்.!

0 3757

சென்னையை அடுத்து உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில், நண்பர்களுடன் குளித்த பிளஸ் 2 மாணவன் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன், கோவூர் அரசுப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த நிலையில்,நேற்று தனது நண்பர்கள் இருவருடன் செம்பரம்பாக்கம் ஏரியில் குளிக்கச் சென்றுள்ளார்.

நீச்சல் தெரியாததால் ஏரிக்கரையில் உள்ள படியில் அமர்ந்து குளித்த ஜெகதீசனை, அவரது நண்பர் சூர்யா நீச்சலடிக்க வற்புறுத்தி நீரில் இறக்கிய நிலையில், அவர் நீரில் மூழ்கியுள்ளார்.

சூர்யா நீரில் மூழ்கிய ஜெகதீசனை மீட்க முயற்சித்த நிலையில், தகவலின்பேரில் வந்த தீயணைப்புத்துறையினர் மாணவனின் சடலத்தை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments