அய்யா காப்பாத்துங்க.. ஓட்டையில் சிக்கிய குடிகார பெருச்சாளிகள்..! பீர் குடித்து வயிறு உப்பியதால் விபரீதம்.!

0 3958

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த குடிவெறியர்கள் மது குடித்து வயிறு உப்பியதால் வெளியே வர இயலாமல் தவித்த நிலையில் போலீசார் மீட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த தண்டலச்சேரியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையின் விற்பனையாளர் நேற்று இரவு வழக்கம் போல கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றிருந்தார். நள்ளிரவு போலீசார் ரோந்து பணியின் போது கடைக்குள் இருந்து இருவர் சத்தமிட்டுக் கொள்ளும் சத்தம் கேட்டது.

அருகில் சென்று பார்த்தபோது சுவற்றை துளையிட்டு உள்ளே அமர்ந்து மர்ம நபர்கள் இருவர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அங்கு வந்த கூடுதல் காவல்துறையினர் குடிவெறி பெருச்சாளிகள் இருவரையும் வெளியே வர கூறினர்.

பீர் குடித்து வயிறு உப்பியதாலும், போதையில் இருந்ததாலும் இருவராலும் வெளியே வர இயலவில்லை

பின்னர் முதலில் ஒருவன் கால்களை நீட்ட போலீசார் பத்திரமாக அவனை வெளியே இழுத்து மீட்டனர்

மற்றொருவன் தின்று கொழுத்த எலி போல புல் போதையில் ஓட்டை வழியாக தலையை நீட்டினான். அவனையும் சட்டையை பிடித்து வெளியே இழுத்தனர்

விசாரணையில் சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த சதீஷ், விழுப்புரத்தை சேர்ந்த முனியன் என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் டாஸ்மாக் கடையின் சுவற்றைத் துளையிட்டு கல்லா பெட்டியில் வைத்திருந்த 14000ரூபாய் ரொக்கப் பணத்தை திருடியது தெரியவந்தது.

மேலும் மது பாட்டில்களையும், திருடி செல்லும் முயற்சியில் இறங்கிய போது போதை தலைக்கேறி உளறியதால் போலீசில் சிக்கியது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கவரைப்பேட்டை காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

டாஸ்மாக் கடையில் சுவற்றைத் துளையிட்டு கொள்ளை அடிக்க முயன்ற இருவர் சாவகாசமாக மது அருந்திய போது போலீசில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments