குற்றாலம் தனியார் விடுதியில் விஷம் அருந்தி தந்தை, மகள் விபரீத முடிவு - தாய் கவலைக்கிடம்.. கடன் பிரச்சனையால் தற்கொலையா ?

0 2517

குற்றாலம் தனியார் விடுதியில் விஷம் அருந்தி 3 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் தந்தை, மகள் என இருவர் உயிரிழந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குற்றால மெயின் அருவி அருகே உள்ள தனியார் விடுதியில் கடந்த 31-ந்தேதி இரவு மதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் தனது குடும்பத்தினருடன் அறையெடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த விடுதிப் பணியாளர் கதவை உடைத்து பார்த்துள்ளார்.

அப்போது தந்தை, மகள் ஆகிய இருவர் உயிரிழந்த நிலையில், மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். தகவலறிந்து வந்த குற்றாலம் போலீசார், மயக்க நிலையில் இருந்த பெண்ணை மீட்டு மருத்துவமனக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments