தொழிலதிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் கைது

0 2736
தொழிலதிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் கைது

சென்னை ஆதம்பாக்கம் தொழிலதிபர் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்கள் விவகாரத்தில் நடந்த வாக்குவாதத்தில் கொலை நடந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் பாஸ்கரன் என்பவர் தனது மகன் கார்த்திக்குடன் சேர்ந்து கட்டுமான தொழிலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஆதம்பாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்து காரில் மாலை 4 மணி அளவில் வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதனை அடுத்து மகன் கார்த்திக் தந்தை பயன்படுத்திய கார் எங்கே என ஜிபிஎஸ்-ஐ வைத்து தேடிய போது, அந்த கார் விருகம்பாக்கம் நடேசன் தெரு அருகே உள்ள ஐஏஎஸ் ஐபிஎஸ் குடியிருப்பு அருகே இருப்பது தெரியவந்துள்ளது.

காரில் தந்தை இல்லாததால் அதிர்ச்சியடைந்த மகன் கார்த்திக் நள்ளிரவு ஒரு மணி அளவில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில், சின்மயா நகர் நெற்குன்றம் சாலையில், கூவம் ஆற்றோரோர சாலையில் பாஸ்கரன் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார்.

இதுதொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அவரது வங்கி கணக்கில் இருந்து ஏடிஎம் மூலமாக நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து 2 முறை பணம் எடுக்கப்பட்டிருப்பது பலத்த சந்தேகத்தை எழுப்பியது.

விசாரணையில் பாஸ்கரன் கட்டுமான தொழிலில் கிடைத்த பண மூலமாக சில சினிமா திரைப்படங்களுக்கும் பைனான்சியராக செயல்பட்டது தெரிய வந்தது. மேலும் நேற்று முன்தினம் மாலை விருகம்பாக்கம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த கணேசன் என்ற சினிமா பைனான்சியர் வீட்டிற்கு வந்ததும் தெரிய வந்தது.

இதனை அடுத்து போலீசார் அங்கு சென்ற போது கணேசன் தலைமறைவாகி விட்டார். அக்கம்பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில், கணேசன் வீட்டில் மனைவி இல்லாத சமயங்களில் பெண்கள் அதிகளவில் வருவார்கள் என்றும் இது குறித்து அவரது மனைவியிடமே புகார் அளித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சோழவரம் அருகே பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண் ஒருவர் வீட்டில் வைத்து செல்போன் எண்ணின் டவரின் உதவியோடு கணேசனை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கைது செய்யப்பட்ட கணேசன் பைனான்ஸ் தொழில் என்ற போர்வையில் கடந்த 5 வருடமாக விருகம்பாக்கம் பகுதியில் விபச்சார விடுதி நடத்தி வந்ததும், கொலை செய்யப்பட்ட பாஸ்கரன் அந்த விடுதிக்கு 2 வருடமாக செல்வதை வாடிக்கையாக வைத்து இருப்பதும் தெரிய வந்தது.

நேற்று முன் தினம் இரவு பாஸ்கரன் கணேசனை தொடர்பு கொண்டு தமக்கு 2 பெண்களை ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு அதிக மதுபோதையில் சென்றதாகவும், பெண்கள் வர தாமதம் ஆனதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும் தெரிய வந்தது.

கணேசனின் குடும்பத்தைப் பற்றி அவதூறாக பாஸ்கரன் பேசியதாகவும், அதனால் கட்டையால் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது

பின்னர் பாஸ்கரனை கீழே தள்ளிய போது தலையில் அடிபட்டு உயிர் இழந்ததாகவும், இதனால் பயந்து போய் அவரது கை ,கால்களை கட்டி யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக பாலீதீன் கவரால் சுற்றி, தோளில் தூக்கிக் கொண்டு போய், இருசக்கர வாகனத்தில் வைத்து நள்ளிரவில் சின்மயா நகர் கூவம் ஆற்றங்கரோம் கொண்டு போய் போட்டு விட்டு சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments