அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 8 பேர் பலி

0 2236

அமெரிக்கா நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஏராளமான அகதிகளை ஏற்றிச் சென்ற படகு டெக்சாஸின் ஈகிள் பாஸ் நகர் அருகே கனமழையால் நீர்வரத்து அதிகரித்த ரியோ கிராண்டே ஆற்றைக் கடக்க முயன்றபோது கவிழ்ந்தது.

புலம்பெயர்ந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல் ஏதும் வெளிவராத நிலையில், தண்ணீரில் தத்தளித்த 90-க்கும் மேற்பட்டோரை அமெரிக்க-மெக்சிகோ அதிகாரிகள் இணைந்து மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments