அமேசான் காடுகளில் வாழ்ந்த பழங்குடியினத்தின் கடைசி நபர் மரணம்..!

0 2612

20 ஆண்டுகளுக்கும் மேலாக அமேசான் காடுகளில் வாழ்ந்த பழங்குடியினத்தின் கடைசி நபராக கருதப்பட்ட அடையாளம் தெரியாத பழங்குடியின மனிதர் காலமானார்.

அவரது மறைவு உலகம் முழுவதும் பேசுபொருளாகி உள்ளது. பள்ளங்களை தோண்டி வைத்து அதன் மூலம் விலங்குகளை வேட்டையாடி உண்டு வந்த அந்த இறுதி பழங்குடி நபருக்கு `Man of the Hole' என்று பெயர் வைக்கப்பட்டது.

தனியொருவராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து வந்த அவர் மிக அரிதாகவே மனித கண்களுக்கு தென்பட்டார். இந்நிலையில், கடந்த 23-ஆம்தேதி அந்த கடைசி நபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments