தேனி மாவட்டம் கம்பம் அருகே குடியிருப்புப் பகுதியில் நாட்டு வெடிகுண்டுவீச்சு

0 2753

தேனி மாவட்டம் கம்பம் அருகே குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசிய 4 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாராயணதேவன்பட்டி, நேசன் கலாசாலை பள்ளி வீதிக்குள் புகுந்த மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர். பலத்த வெடிசத்தம் கேட்டு வீடுகளில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள், அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினர்.

தகவலறிந்து வந்த ராயப்பன்பட்டி போலிசார், தடயங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். வெடிகுண்டு வீச்சில் தொடர்புடையதாக கூறி காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த சங்கிலி, சிவனாண்டி, சுருளி, மகேந்திரன் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments