டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா வளாகத்தை பிரதமர் மோடி 8ந் தேதி திறந்து வைக்கிறார்

0 2972

டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் முக்கோண வடிவிலான நாடாளுமன்றம் குடியரசுத் தலைவர் மாளிகை , பிரதமர் அலுவலகம், இல்லம் போன்றவற்றை உள்ளடக்கிய சென்ட்ரல் விஸ்டா வளாகத்தை பிரதமர் மோடி வரும் 8 ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

ராஜபாட்டையில் கட்டப்பட்டுள்ள சென்ட்ரல் விஸ்டா வளாகத்தில் மாநில வாரியான உணவகங்களுக்கும் பசுமை நடைபாதைகளும், தோட்டங்களும்,  பார்க்கிங் இடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆயினும் இந்தியா கேட் முதல் மான்சிங் சாலை வரையிலான பசுமைத் தோட்டப்பகுதிகளுக்கு உணவை எடுத்துச் செல்ல அனுமதியில்லை.

விஜய் சதுக்கம் முதல் இந்தியா கேட் வரையிலான மொத்த வளாகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.20 மாதங்களுக்கு இப்பகுதியைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments