வி.ஏ.ஓ கையெழுத்தை போலியாக பதிவிட்டு இரு மூதாட்டிகளுக்கு சொந்தமான நிலத்தை அடுத்தவருக்கு விற்ற பங்காளி கைது.!

0 4708

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள களத்தூர் வி.ஏ.ஓ கையெழுத்தை போலியாக பதிவிட்டு, இரு மூதாட்டிகளுக்கு சொந்தமான நிலத்தை அடுத்தவருக்கு விற்ற பங்காளியை போலீசார் கைது செய்தனர்.

2 மூதாட்டிகள் மற்றும் குழந்தை சாமி குடும்பத்திற்கு பாத்தியப்பட்ட கூட்டு பட்டாவான அந்த நிலத்தை குழந்தைசாமி தனக்கு மட்டும் சொந்தமானது என்று வி.ஏ.ஓ ஒப்புதல் தந்துவிட்டதாக கூறி போலி கையெழுத்திட்டு , அதே ஊரை சேர்ந்த சக்திவேலுக்கு விற்றுள்ளார்.

தகவல் அறிந்து வி.ஏ.ஓ தனசேகரன் அளித்த புகாரின் பேரில் போலி ஆவணம் தயாரித்த குழந்தை சாமியை போலீசார் கைது செய்தனர், சக்திவேலிடம் இருந்து தங்கள் நிலத்தை மீட்டுத்தர 2 மூதாட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments