வால்மார்ட் வணிக வளாகத்தை தகர்க்கப் போவதாக விமானத்தில் பறந்து கொண்டே மிரட்டல் விடுத்த விமானியிடம் போலீசார் பேச்சுவார்த்தை

0 2930
வால்மார்ட் வணிக வளாகத்தை தகர்க்கப் போவதாக விமானத்தில் பறந்து கொண்டே மிரட்டல் விடுத்த விமானியிடம் போலீசார் பேச்சுவார்த்தை

அமெரிக்காவின் மிஸிசிப்பி மாகாணத்தில் வால்மார்ட் வணிக வளாகத்தை தகர்க்கப் போவதாக விமானத்தில் பறந்து கொண்டே மிரட்டல் விடுத்த விமானியிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

டியூபுலோ நகரில் சிறிய ரக விமானம் ஒன்றைத் திருடிய விமானி ஒருவர் வால்மார்ட் கட்டடத்தில் மோதப்போவதாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். அந்த விமானி வானில் வட்டமடித்துக் கொண்டிருக்கும் நிலையில், வால்மார்ட் ஊழியர்கள் உடனடியாக கட்டடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும், நிலைமை சீராகும் வரை வால்மார்ட்டை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments