தனது மகளை விட நன்றாக படிக்கும் மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சக மாணவியின் தாய் கைது

0 3816
தனது மகளை விட நன்றாக படிக்கும் மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சக மாணவியின் தாய் கைது

காரைக்காலில், தனது மகளை விட நன்றாக படிக்கும் மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சக மாணவியின் தாயை போலீசார் கைது செய்தனர்.

தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் ராஜேந்திரன் - மாலதி தம்பதியின் மகன், நேற்று பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும் தொடர்ந்து வாந்தி எடுத்ததால் பெற்றோர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து பெற்றோர் மாணவனிடம் கேட்ட போது, பள்ளி வாட்ச் மேன் கொடுத்த குளிர்பானத்தை குடித்ததாக கூறியுள்ளான். மாணவனின் தாய் அளித்த புகாரின் பேரில் வாட்ச் மேனிடம் போலீசார் விசாரித்ததில், மாணவனுடன் பயிலும் ஒரு மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா என்பவர், சிறுவனின் தாய் கொடுத்ததாக கூறி அவனிடம் கொடுக்க சொன்னதாக கூறியுள்ளார்.

சகாயராணியை அழைத்து போலீசார் விசாரித்ததில் அவர் மறுப்பு தெரிவித்த நிலையில், பள்ளி சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில் சகாயராணி, 2 கூல்ட்ரிங்ஸ் பாட்டிலை வாட்ச் மேனிடம் கொடுத்தது தெரியவந்ததை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

பள்ளியில் முதல் மதிப்பெண் எடுப்பதில் மாணவனுக்கும் மாணவிக்கும் இடையே போட்டி இருந்த நிலையில், தனது மகளை விட அதிக மதிப்பெண் எடுத்ததால், குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து சகாயராணி மாணவனை கொல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments